About & History



      ஆடலூர் எண்னும் கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் கொடைக்கானல்  மலை பகுதில் அமைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு தேவையான அணைத்து வசதிகங்ளும் ஓரளவு கொண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை கிராமத்தில் மிதமான குளிர் நிறைந்த வெப்பநிலை எப்பொழுதும் இருக்கும். இந்த மலை பகுதியில் உள்ள பழங்குடியினரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இங்கு பிழைக்க வந்த வர்கள்தான். ஆடலூரை சுற்றியுள்ள குக்கிராமங்களில் பழங்குடியின மக்கள் இன்னும் வாழ்த்து கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டின் பில பகுதிகளில் இருந்து வந்தேறிய மக்கள் தான் ஆடலூரில்  அதிகமாக  வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 க்கும் மேற்பட்ட தமிழ் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காந்திபுரம், குளவிக்கரை, ஊரடிவலசு, பெருமலை, பூமலை போன்ற 5 குக்கிராமங்கள் ஆடலூர் ஊராட்சிக்கு உட்பட்டவை ஆகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளத்து.

கொடைக்கானல் பகுதியை கீழ் மலை, மேல் மலை என இரண்டாகப் பிரித்துதான் சொல்வோம். கீழ் மலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பாச்சலூர், காமனூர், பொட்டலங்காடு, கொடலங்காடு போன்ற பஞ்சாயத்துகள் பெரியகுளம் தொகுதியிலும்... பன்றிமலை, ஆடலூர், கிழக்கு செட்டியபட்டி, மணலூர், பெரும்பாறை பஞ்சாயத்துகள் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் வருகின்றன. 

                    ஆடலூரில்  கோவில்கள் - Temples (5), பள்ளி கூடம் - School (1), நூலகம்- Library (2), வங்கி - Bank (1), ஏ.டி.எம் - ATM (2), தபால் நிலையம் - Post Office (1), காபி வாரியம் - Coffee  Board (1), ஆரம்ப சுகாதார நிலையம் (1), மருந்தகம் - Medical (1), இணையம் & ஜெராக்ஸ் கடை - Browsing & Xerox (2), மளிகை கடை - Grocerry Shops (9), ஹோட்டல் & தேநீர் கடை - ஹோட்டல் & Tea shops (4), விற்பனை பங்கு [தரகு] கடைகல் - Commission Store (4), இறைச்சி கடை - Meat Shop (4), நிதி - Finace (2), மொபைல் கடை - Mobile Shop (3), தையல் கடை - Tailor Shop (2), சிகை திருத்துதல் கடை - Hair Cutting Shop (2) மற்றும் பேருந்து வசதிகளும் உள்ளன. ஆடலூரில் இருந்து திண்டுக்கல் மற்றும்  வத்தலகுண்டு போன்ற நகரங்களுக்கு  வழக்கமாகவும் , கொடைக்கானல் மற்றும் ஒட்டச்சத்திரம் போன்ற நகரங்களுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. ஆடலூருக்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளதால் 15க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் அதிகமாக உள்ளன. இந்த லாரிகளின் மூலம் இங்கு விளையும் பொருட்கள் அனைத்தும் ஒட்டச்சித்திரம், திண்டுக்கல், திருச்சி மற்றும் போடிமெட்டு போன்ற சந்தைகளுக்கு கொண்டுசெல்லபடுகிறது.

              இயற்கை பேரிடர்களால் பல சமயம் போக்குவரத்து சாலைகள், மின்சாரம், அலைபேசி சமிக்ஞை மற்றும் இணைய சேவை மற்றும்  பாதிக்க படும், இன்றைய நாகரிக வளர்ச்சியில் கணினி, அலைபேசி, பேங்க் போன்ற அனைத்துமே இனையத்தை சார்ந்து செயல் படுபவையால் இங்குள்ள மக்களின் அத்தியாவசியமாக மின்சாரம், இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் உள்ளது. ஆடலூர் SBI வங்கியில் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது இனைய வசதி தான்.

                            ‘சராசரி இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு வருடத்துக்கு 6.5 சதவிகிதம்தான் இருக்கவேண்டும். ஆனால், மலைப்பகுதியில் 12 சதவிகிதம் பேர் சாகிறார்கள். இதற்குக் காரணம் இங்கு உள்ள தண்ணீரில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் போதிய அளவு இல்லை. இந்தத் தண்ணீரைக் குடிப் பதால், சிறுநீர் குழாயில் கல் அடைப்பு நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. குளிர்ப் பிரதேசம் என்பதால், மூச்சிரைப்பு நோயும் பரவலாக இருக்கிறது. இதய நோயும் அதிகமாகவே காணப்படுகிறது. மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வும் சற்று  குறைவாக உள்ளது. இதனால்தான் சாவின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

              மலைப்பாதை என்பதால் ரோடுகள் மிக தரமானதாகவும்  மற்றும் அகலமாகவும் போடப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை தாங்கி கொள்ளும் வகையில் இந்த தார் சாலைகளை அமைத்துள்ளது மிக வசதியாக உள்ளது.





         2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

 

களஞ்சியம்

 

விவசாயம் [agriculture] 

      காப்பி, ஏலக்காய், மிளகு, வாழை, ஆரஞ்சு, அவகோடா, எலுமிச்சை, கொய்யா, பீன்ஸ் மற்றும்  அவரை போன்ற பலவேறு இயற்கை பழங்களும் காய் கனிகளும் இங்கு விளைகின்றன. இங்குள்ள விவசாயத்தை பொறுத்தவரை சிறு முதலாளிகளே அதிகமாக உள்ளனர். 5 க்கும் அதிகமான  எஸ்டேட்கல் உள்ளன. மலைவாழை, பாக்கு மரங்கள், மிளகு கொடிகளை

மேற்கு தொடர்ச்சி மலைகள்

            திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில்   ஆடலூர், பன்றிமலை, கே. சி.   தாண்டிகுடி,  பண்ணைக்காடு, , சிறுமலை உள்ளன.


  பாச்சலூர், காமனூர், பொட்டலங்காடு, கொடலங்காட, பன்றிமலை அமைதிசோலை, அழகுமடை, முருக்கடி, தோணிமலை, பள்ளக்காடு பகுதியில்

சுற்றுலா

     சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, நம் அறிவை விரிவாக்கும் அனுபவ ஆசிரியர். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருப்பது சுற்றுலாதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லும்போது நமது முன்னோர்களின் கலாசாரம், வாழ்வியல் முறைகளை அறியலாம். தீம் பார்க் போன்ற இடங்களில் அறிவியலின் புதுமைகளைச் சந்திக்கலாம். மலை, காடு, அருவி எனச் செல்லும்போது இயற்கையின் பிரமாண்டத்தையும், அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையையும் உணரலாம்.

ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி, பாச்சலூர் போன்ற  கிராமங்கள் இன்னும் கொடைக்கானல் போன்று சுற்றுலா தலமாக மாறாமல் இருப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது.  இயற்கை 

 

மலை குகைகளில் வசிக்கும் மனிதர்கள்

ஆடலூர், பன்றிமலையின் கீழ்ப் பகுதியில் பளியர் மலைவாழ் மக்கள் மலைக் குகையில் வசிக்கின்றனர். நாகரீக வளர்ச்சியின் காரணமாக இயற்கை அழிந்து கொண்டு இருப்பதால் மலை குகைகளில் வசிக்கும் மனிதர்களை காண்பது அரிதே.

ஆத்தூர் அணை

தடியன்குடிசை 

          மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் பகுதியில், கிழக்குப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி மலையில் அமைந்திருக்கிறது இயற்கை எழில் தவழும் தடியன்குடிசை. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திண்டுக்கலில் இருதுந்து ஆடலூர் வழியாகவும் தடியன்குடிசைக்கு போகலாம். காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய்த் தோட்டங்கள் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன. ஆரஞ்சு, அவகோடா, எலுமிச்சை மரங்கள் நிறைந்துள்ளன. ஏலக்காய் வாரிய அலுவலகம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இங்கே உள்ளன. வெளவால் தோற்றம்கொண்ட குள்ளர்கள் வாழ்ந்த குகைகளைக் கண்டுகளிக்கலாம்.

குடகனாறு  

          தடியன்குடிசையில் இருந்து வடக்குப்புறம் ஆடலூர் செல்லும் வழியில் குடகனாறு உள்ளது.

பட்லாங்காடு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்

தடியன்குடிசையில் இருந்து மங்களம்கொம்பு செல்லும் வழியில் பட்லாங்காடு உள்ளது. தடியன்குடிசையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்லாங்காடு பகுதியில் தேனீ வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் குளுமையாக இருக்கும் இதமான பகுதி.

மலை பாதை பயணம்


   அழகும் இயற்கையும் பின்னிப்பிணைந்து நாகரிகத்தின் வெளிப்பூச்சுக்களும் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் அவ்வளவாய் குடிபுகாமல் இன்னமும் பளிங்கு போன்ற பரிசுத்தத்துடனேயே மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் இன்னும் சில கிராமங்களில்.

தேவையான வசதிகள்

  • பெட்ரோல் பங்க்
  • விளையாட்டு மைதானம்
  •  108 அவசர உதவி வாகனம் (Ambulance)

ஆடலூரை சுற்றி உள்ள பழங்குடியின மக்கள்

கொழுச்சான் மலை

கொழுச்சான் மலையில் காலம்காலமாக வசித்து வரும் பழங்குடியின மக்கள்

இயற்கையின் சிறப்பு 

  • கரும்மேகங்கள் கூடி நேற்றுப் பெயும்  மழை
  • மீதான வெப்பநிலை 

இயற்கை பிரச்சனைகள்

  • கனமான பருவமழை மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தல்
  • கனமான பருவ மழையால் விவசாயம் பாதிக்க படுத்தல்  
  • மழை தொடரும் பட்சத்தில் நிலச்சரிவு
  • மின் கம்பங்கள் சாய்தல்
  • ஆபத்தான மின்கம்பங்கள் தொங்கிய நிலையில்
  • மின்கம்பிஅறுந்து விழுதல்
  • மரங்கள் சாலைகளில் விழுவதால் போக்குவரத்து பாதிப்பு


அழிந்து வரும் காட்டு  வனவிலங்குகள்

பொதுவாக மலை கிராமத்தில் உள்ள தோட்டப் பகுதிகளில்   காட்டு யானைகள், காட்டு மாடுகள், பன்றிகள் போன்ற வன விலங்குகள் புகுந்து அங்குள்ள மக்களின் விவசாய நிலங்களை சேதப்படுத்துவது இயற்கையே. திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டு வன விலங்குகள் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து  விவசாய பொருள்களை சேதப்படுத்தி வருவது 2010  முதல் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது கடும் வறட்சி காரணமாக  உணவு தேடி அலைகின்ற சில சமயங்களில் வழி மாறி சாலைகளில் வலம் வந்த இந்த வன விலங்குகள் ரோட்டோரமுள்ள அணைத்து பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. காட்டு மாடு, யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் இரவில் பயணிக்க அச்சப் படும் நிலைமை வந்துள்ளது வருத்தப்படவைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் உள்ள கிராமப் பகுதிக்கு சேதப்படுத்தி வருகின்றன.  இயற்கையை ஆழிப்பதால் வந்த நிலைமை தான் என்பதை தெரியாமல் இங்குள்ள மக்கள் காட்டு யானை, காட்டு மாடுகள் போன்ற வனவிலங்குகள் எங்களுக்கும் எங்களின் விவசாயத்திற்கும் இடையூறாக உள்ளன என்று போராட்டங்களிலும், வனத்துறையினரிடமும் தெரிவிப்பது இயற்கைக்கு எதிரான வேடிக்கையாக தான் உள்ளது. இந்த இயற்கை நிலையை அறிந்த சிலரும் இந்தநிலையை மாற்ற தகுந்த நடவடிக்கைளை எடுக்காமல் இருப்பதும் வருத்தத்தை அளிக்கின்றது. பூமீதான  கொள்கையின் படி பிரிக்கப்பட்ட நிலங்களை தவிர வனவிலங்குகள் இருக்கீன்ற  (forest ) கட்டுப பகுதிகளிலும் இங்குள்ள மனிதர்களும்,  எஸ்டேட் வைத்திருப்பவர்களும் ஆக்கிரமிப்பு செய்வதலையே இந்த பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. 2016 ஜூன் மாதம் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பிரச்சனைக்காக ஆடலூர் அருகில் உள்ள காந்திபுரம் என்ற கிராமத்து மக்கள் போராட்டங்களிலும், கலக்டரிடம் மனுவும் கொடுத்தனர். இயற்கையே நம்பி வாழ்கின்ற இந்த வன விலங்குகளின் பிரட்சனையை யாரிடம் இந்த வனவிலங்குகள் கூற முடியும், போராட்டங்களிலும் இறங்க முடியும். 

செல்போன் சிக்னல்கள் மற்றும் உயர் அழுத்த மின்கம்பங்கள் போன்றவைகள் விவசாயபகுதிகளிலும், (forest ) காட்டு பகுதிகளிலும் மக்களின் நலனுக்காக அரசாங்கம் போடப்படுகின்றன.

கூடுதல் விவரங்கள்