ஆடலூர் பஸ் கவிழ்ந்து 100-க்கும் மேற்பட்டோர் காயம்
ஆடலூர் பஸ் கவிழ்ந்து 100-க்கும் மேற்பட்டோர் காயம்
2011_ 07_ 22
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலூர் மலை கிராமத்துக்கு நேற்று மாலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை முத்தையா என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக கணேசன் இருந்தார்.
பஸ் ஆடலூர் மலை கிராமத்துக்கு சென்று விட்டு மீண்டும் தருமத்துப்பட்டி வந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்து கொண்டு 10 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டு அலறினர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தனர். இந்த விபத்தில் சுப்பிரமணி, ராமச்சந்திரன், குப்புசாமி, அண்ணாத்துரை, ராஜாத்தி அம்மாள், பேபி உள்பட 61 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களில் 23 பேருக்கு இடுப்பு எலும்பு முறிந்து விட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் நாகராஜன், ஆத்தூர் தொகுதி எம். எல்.ஏ. ஐ.பெரியசாமி ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Source : தினமணி - ஆடலுர் பஸ் கவிழ்ந்து 100-க்கும் மேற்பட்டோர் காயம்