2016_07_29- ஆடலூரில் ஜூப் 🚙 விபத்தில் ஒரு பாட்டி உயிர் இழந்தார், வேலை ஆட்கள் படுகாயம்


தருமத்துப்பட்டி, கரசப்பட்டி, பித்தாலைபட்டி, சித்தூர், அய்யம்பாளையம், வாடிப்பட்டி போன்ற ஊர்களில் இருந்து தினமும் 300 க்கும் மேற்பட்டவர்கள் பன்றிமலை, ஆடலூர், சோலைக்காடு, கே.சி பட்டி, குப்புமால்பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாரை, புள்ளாவெளி மற்றும் மஞ்சள்பிரப்பு போன்ற ஊர்களுக்கு
எஸ்டேட் வேளைக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பேருந்துகளிலும்  , லாரிகளிலும் , ஜீப்  போன்ற வாகனங்களை பயன்படுத்துகின்றனர். 2016 ஜீலை 29 அன்று வேலை ஆட்கள் ஆடலூரில் இருந்து ஜீப்பில் தருமத்துப்பட்டிக்கு சென்ற போது ஆடலூரில் வண்ணாத்துரை என்ற இடத்தில் விபத்தானது. இதில் ஒரு பாட்டி உயிர் இழந்தார் மற்றும் பலர் படு காயம் அடைந்தனர். ஜீப் ஓட்டுநர் மது அருந்தி வந்தால் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Comments