ஆடலூர் மக்களின் ஆடிமாத தெய்வ வழிபாடு
![]() |
மதுரைவீரன் சாமி வழிபாடு - ஆடலூர்
|
ஆடி மாதம் என்றாலே கோவில்களில் அதிகமாக தெய்வங்களை வழிபடுவது தமிழரின் வழக்கமாக உள்ளது. ஆடி 18 தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் முக்கியமாக பிரபலமான கோவில் தலங்களான அணைப்பட்டி ஆஞ்சிநேயர் கோவில், ஆத்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் போன்ற தளங்களுக்கு சென்று தெய்வங்களை வழிபடுவது வழக்கம்.
ஆடலூரில் உள்ள பழங்குடியினரைத்
தவிர மற்றவர்கள் எல்லாம் இங்கு
பிழைக்க வந்த வர்கள்தான் என்பது தான் உண்மை. ஆடலூரை
சுற்றியுள்ள குக்கிராமங்களில் பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டுகளாக இன்னும் வாழ்த்து கொண்டு
இருக்கின்றனர். இவர்கள் தான் இந்த மலைப்பகுதிகளுக்கு பூர்விக சொந்தக்காரர்கள். தமிழ்நாட்டின் பில பகுதிகளில் உள்ள பல ஊர்களில் இருந்து வந்தேறிய மக்கள் தான்
ஆடலூரில் அதிகமாக வசிக்கின்றனர். இப்படி இங்கு வசிக்கின்ற மக்களின் குல தெய்வங்கள் வேறு வேறு இருக்கிறது. இந்த குலதெய்வங்களை ஆடி மாதமும், பிற மாதங்களும் தெய்வங்களை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இன்றுவரை இங்குள்ள மக்கள் ஒவ்வாரு ஆடிமாதமும் அவர் அவர்களின் குலதெய்வங்களை வழிபட்டு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அக்னி அம்மன் - ஆடலூர்
ஆடலூரில் இருந்து KC பட்டி க்கு செல்லும் வழியில் காந்திபுரத்திலிருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது அக்னி அம்மன் கோவில். ஆடலூரில் உள்ள பலரின் குல தெய்வமாக உள்ளது. ஒவ்வொரு ஆடி மதமும் இந்த தெய்வத்தை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இதற்க்கு இந்த தெய்வங்களை வழிபாடும் இரத்த பந்தங்களை மட்டுமே அனுமதிப்பதுண்டு. இந்த வருடமும் 2016_08_09 தேதி செவ்வாய்க்கிழமை அக்னி அம்மன் தெய்வத்தை வழிபட்டனர்.
அங்காள ஈஸ்வரி - அய்யர்மலை,கரூர்
2016 ஜூலை 27 அன்று அய்யர்மலை கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. 2016
ல் கொண்டாடப்பட்ட இந்த திருவிழா 70 ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டாடப்பட்டது
என்பது சிறப்பு மிக்கதாகும். இதற்க்கு முன்பு 1947ல் திருவிழா கொண்டாடினர்.
இந்த திருவிழா 8 நாட்கள் நடந்தது. காவேரி நதியில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவந்தனர். பின் மதுரைவீரனுக்கு குறி எடுக்கப்பட்டது. மலையனுரில் இருந்து மண் எடுத்து வந்து அங்கே வழிபட்டனர். ஆடலூரில் வசிக்கும் சில குடும்பங்களின்
குலதெய்வமாக இந்த தெய்வங்கள் உள்ளது. ஆடலூரில் இருந்து பலர் இந்த திருவிழா
நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சில காரணங்களால் 1947க்கு பின்பு இந்த தெய்வத்தை வழிபடமுடியாமல் போனதாம்.
இனி ஒவ்வெரு 5 வருடத்திற்க்கு ஒரு முறை கொண்டாட போவதாக கூறியுள்ளனர்.
மதுரைவீரன், கருப்பணசாமி வழிபாடு - ஊத்துப்பட்டி, கரூர்.
கரூர் ஊத்துப்பட்டி பகுதிகளில் இருந்து ஆடலூரில் வசிக்கின்ற மக்கள் ஊத்துப்பட்டியில் உள்ள மதுரைவீரன், கருப்பணசாமி, அலமேலு போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வரு வருடமும் ஆடி மதம் 18தேதி ஆடலூரில் இருந்து ஊத்துப்பட்டிக்கு சென்று வழிபடுவது வழக்கம் ஆடலுர் மக்களும் பலர் இதில் கலந்துகொள்ளுவதுண்டு. இரத்த பந்தங்களில் யாரேனும் இறந்தால் அந்த வருடம் மட்டும் தெய்வ வழிபாட்டை தவிப்பது உண்டு. மேலும் அசைவ விருந்தும் உண்டு.
![]() |
மதுரைவீரன், கருப்பணசாமி வழிபாடு - ஊத்துப்பட்டி, கரூர் |
![]() |
மதுரைவீரன், கருப்பணசாமி வழிபாடு - ஊத்துப்பட்டி, கரூர்
|
மதுரைவீரன் சாமி வழிபாடு - ஆடலூர்
வருடத்திற்க்கு ஒரு முறை ஆடி மாதம் மதுரைவீரன் சாமி வழிபடப்படுகிறது. ஆடலூரில் விநாயகர் கோவிலில் இருந்து ஊரக்காற்ட்டிரிக்கு செல்லும் வழியில் 500 மீட்டர் தொலைவில் திருநாவுக்கரசு என்பவரது தோட்டத்தில் இந்த கோவில் உள்ளது. இந்த வருடமும் செவ்வாய்க்கிழமை 2016_ 08_ 09 தேதி வழிபடப்பட்டது. இதில் ஆடலூர் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
![]() |
மதுரைவீரன் சாமி வழிபாடு - ஆடலூர் |
![]() |
மதுரைவீரன் சாமி வழிபாடு - ஆடலூர் |
![]() |
மதுரைவீரன் சாமி வழிபாடு - ஆடலூர் |
சீலைக்காரி, முனியப்பசாமி வழிபாடு - ஆடலூர்
சீலைக்காரி சாமிக்கு தனி கோவில் கிடையாது, முனியப்ப சாமிக்கு கோவில் ஆடலூரில் இருந்து 300மீட்டர் தொலைவில் உள்ளது. சீலைக்காரி தெய்வத்தை வழிபடுபவர்கள் அவர்களின் இரத்த பந்தங்களும் சேர்ந்து இந்த தெய்வத்தை ஒன்றாக வீடுகளில் வழிபடுகின்றனர். சீலைக்காரிசாமியை ஆண்டாண்டு காலமாக வழிபாடும் மக்கள் மட்டுமே இந்த தெய்வ வழிபாட்டுக்கு அனுமதிக்க படுகின்றனர். இரத்த பந்தங்களை தவிர இந்த வழிபட்டிருக்கு மற்ற மக்களை அனுமதிப்பதில்லை. செவ்வாய்க்கிழமை 2016_08_ 09 அன்று இரவு 11 மணிக்கு சீலைக்காரி சாமியை வழிபட்டனர். சீலைக்காரி தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்ட மக்கள் இந்த முனியப்ப சாமியையும் வழிபடுகின்றனர். ஆனால் முனியப்பசாமி வழிபாட்டிருக்கு அணைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முனியப்ப சாமிக்கு வழிபாட்டிற்கு பின் அசைவ விருந்தும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. முனியப்ப சாமி வழிபாடு 2016_08_10 தேதி சிறப்பாக நடை பெறுகின்றது.
Comments