சடையாண்டி கோவில்-ஆடி அமாவாசை திருவிழா


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் ஆடித் திருவிழா
இன்று நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஆடலுர், பன்றிமலை அடிவாரத்தில் உள்ள, கரடு முரடான பாதையில் நடந்து சென்று, மலை உச்சியில் உள்ள சடையாண்டி சாமியை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அழகு குத்தி, பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்து, வாண வேடிக்கை மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவிழாவை முன்னிட்டு அக்கரைப்பட்டி ஊராட்சி சார்பில் குடிநீர், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.































Comments