இயற்கையை மீட்டு எடுப்போம்
இயற்கை அழிந்து(அழித்து) கொண்டு இருப்பதற்க்கு இதனை படித்து கொண்டு இருக்கும் நானும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறேன். மனித இனத்திற்கு இயற்கையின் மேல் உள்ள பிணைப்பும், அக்கறையும், சரியான கல்வியும், சமூக விழிப்புணர்வும் மற்றும் பகுத்தறிவும் இல்லாததால் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. அறிவியல் வளர்ச்சியை கண்டு திகைக்கும் மனித இனமே!!!!, தவறான புரிதலினால் இயற்கையுடன் சேர்ந்து நீயும் அழிந்து கொண்டு இருக்கிறாய் என்பதை மறவாதே!!!!!.வன உயிரினங்களுடன், 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மேற்க்கு தொடர்ச்சி மலைகளினிலே கொடைக்கானல், பூலத்தூர், கிழவரை, கவுஞ்சி, பூண்டி , மன்னவனுர், பண்ணைக்காடு, ஊத்து,
தாண்டிக்குடி, மங்கலம்கொம்பு, தடியன்குடிசை, பெரும்பாறை, மஞ்சள் பரப்பு,
குப்பிமாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூர், பாச்சலூர் , ஆடலுர், சோலைக்காடு ,
பன்றிமலை, அழகுமடை போன்ற 400 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம். இந்த மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் மனித இனம் வாழ்த்துவந்ததர்க்கு அடையாளமாய் இன்றும் பல கல் வெட்டுக்குள் புதைந்து கொண்டு இருக்கின்றன.
குள்ள மனிதர்கள் வாழ்ததற்கான குகைகள் நிறைய இருக்கின்றன , இவைகளை தடியன்குடிசை பகுதிகளில் இன்னும் காணலாம். சித்தர்களில் ஒருவரானா பன்றிமலை சித்தர் இங்கு வாழ்ந்து வந்தார் என்பதை பல பூரணங்களும், சங்க கால பாடல்கலும் உறுதிப்படுத்திகின்றது. மிக பழமையான தாண்டிக்குடி அருள்மிகு பாலமுருகன் திருகோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக கேரளாவுக்கு கொடைக்கானல், மூனார் வழியாக இங்குள்ள மனிதர்கள் வணிகம் செய்தானர் என்பதற்கு பல ஆதாரங்களும் இருக்கின்றன. மனிதனும் வன உயிரினங்களும் சேர்த்தே இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்து வந்ததற்கு பல சான்றுகளை அடுக்கி கொண்டே போகலாம். சில சமயங்களில் மனித இனம் வரம்பு மீறி நடக்கவும் செய்கிறான், இதனால் உயிர் இழப்பும் ஏற்படுகின்றது.
பெரிய சுற்றுலா தளமான கொடைக்கானல் சார்ந்து வாழும் மக்களுக்கு மழை இன்மை , வன விலங்குகளால் விவசாய நிலம் அழிதல் போன்றவைகளால் அதிக பாதிப்புகள் இருக்காது. அவர்களின் வாழ்வாதாரம் சுற்றுலா மக்களை சார்ந்து இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் மற்ற கிராம மக்களுக்கு இது ஒரு பெரிய வாழ்வாதார பிரச்னை. எனக்கு தெரிந்த இதுவரை நாம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை விட அழித்து கொண்டு இருக்கின்றோம் என்பது தான் உண்மை. நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த மழை பகுதிகளில் வாழ்வதற்க்கு நாம் எல்லாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மாசு கலக்காத காற்று, சுத்தமான தண்ணீர் (Crystal clear), வாழ்வதற்க்கு தகுந்தது போல அதிக குளிர் இல்லாமல், வருடிவரும் கார்மேக கூட்டங்களுடன், எங்கு பார்த்தாலும் பசுமை நிறம் என பூமியில் உள்ள ஒரு சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
விவசாயமே முக்கியமான வாழ்வாதார தொழிலாக உள்ளது. கடந்த 15 வருத்தங்களாக சந்தித்து வரும் பிரச்சனைகள் எத்தனை? உறுதியாக சொல்ல முடியும் இன்னும் 5 வருடங்களில் விவசாயம் செய்வதற்க்கு தகுதி இல்லாத நிலமாக மாறிவிடும். இப்போது விவசாயம் செய்யும் நிலங்களில் காப்பி, மிளகு, வாழை, பழா, ஏலக்காய், பீன்ஸ், அவரை, சவு சவு, எலுமிச்சை, ஆரஞ்சு, காரட், முள்ளங்கி என இந்த மலைப்பகுதிகளில் விளையும் அனைத்தும் செயற்கையானவைகளாக உள்ளன. முன்பு எல்லாம் எந்த பூச்சி கொல்லி மருந்துகளையோ இல்லை ரசாயன உரங்களையோ பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போது ஒரு பருவத்துக்கு செயற்கை பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தாவிட்டால் அடுத்த பருவத்திரிக்கு செடி மரங்கள் அனைத்தும் காய்ந்து பொய்க்கின்றன. மரம் செடி கொடிகளின் இயற்கை தன்மை செயற்கைக்கு ஏற்றார் போல மாறிவிட்டான. இதனை பயன்படுத்தும் அனைவரும் நோய்வாய்ப்படுகின்றனர். இதற்க்கு மேலாக பெரும் பிரச்சனையாக மலை பகுதிகளில் மழை இல்லை, குடிக்கும் தண்ணீரை வத்தலகுண்டு, திண்டுக்கல் போன்ற நகரங்களில் இருந்து பிளாஸ்டிக் கேன்களில் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. மலை பகுதிகளில் தண்ணி பஞ்சம் என சொல்லும் நிலைமை வேறு. ஏன் மழை வரவில்லை என்று ஒரு முதியவரிடம் கேட்டால் கடவுளின் பெயரை சொல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. தவறுகள் அனைத்தையும் மனிதன் செய்தபின், தன் தவறை உணராத மனித இனம் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தான் நான் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு என்னுடைய தோட்டத்திரிக்கு சென்றேன். என்னுடைய தோட்டத்தில் களைகள் அதிகமாக இருக்கிறது என களைகளை எடுத்து சரி செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் தெரிந்தது ஏன் மழை வரவில்லை என்று. களை எடுத்ததில் 40% மேல் என்னுடைய நிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள்!!!. எங்கிருந்து வந்தது இந்த பிளாஸ்டிக் பொருட்கள் என ஆராந்தல், மேலும் சில அதிர்ச்சி. தினமும் வேலை செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களும், என்னுடைய நிலத்தை மலட்டு தன்மைக்கு மாற்றிய செயற்கை உரங்களுக்காக உபயோக படுத்திய பிளாஸ்டிக் சாக்குகளும் அதிகமாக இருந்தன. மலை கிராமங்களை பொறுத்தவரை வெளிப்புறங்களில் உணவு தேடி அலைகின்ற வீட்டு கால்நடைகளும், காட்டு வன விலங்குகளும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை தின்று உயிர் இழக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு ஆடலூரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது குதிரை பிளாஸ்டிக் பைகளை உண்டதால் இறந்தது குறிப்பிடத்தக்கது, இது போன்று பல குதிரைகளும், பசுமாடுகளும் மற்றும் ஆடுகளும் மலைக்கிராமங்களில் இறந்தது வருத்தப்படவைக்கிறது. வீடு மற்றும் கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் வீட்டு வளர்ப்பு விலங்குகள் இறக்கின்றன. குறிப்பாக கடைகைகளில் அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளது. மது அருந்துபவர்கள் ஊர்களுக்கு வெளியில் காட்டுப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவதாழும், விவசாய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாலும் காட்டு வன விலங்குகள் மற்றும் பறவைகள் பல உயிர் இழக்கின்றன மேலும் விவசாய நிலமும் பிளாட்டிக் போன்ற நஞ்சு கலந்து மலட்டு தன்மையை பெறுகின்றன, நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படும் அவல நிலை இருந்து வருகின்றது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் நிலத்தடி நீர் குறைந்ததற்கு முக்கிய காரணமாக இந்த பிளாஸ்டிக் கழிவு தான் கரணம். கிராமங்களில் கூட துணி பைகளை பயன்படுத்துவது இல்லை. 5 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்களில் போட்டுத்தான் வீட்டிற்க்கு எடுத்து செல்கின்றனர். கடைகளில் பிளாஸ்டிக் கவர் தரவில்லை எனில் வேறு கடைக்கு சென்று விடுவது, வியாபார நோக்கத்தில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை கொடுத்து விடுகின்றனர். பிளாஸ்டிக்கை தேவைஇல்லாமால் பண்படுத்தவேண்டாம் என்று வாங்குபவர்கள் மனதில் எண்ணம் இல்லை எனில் இதனை தடுக்க முடியாது. செயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை மண்ணை மலட்டு தன்மையாக மாற்றியது மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் பயன்பட்டால் மழை நீர், நிலங்களில் இறங்கவும் வழி இல்லாமல் செய்து விட்டோமே.

வனப்பகுதிகளில் மரங்களை வெட்டுவதர்க்கு யாருக்கும் உரிமம் இன்னும் கொடுக்கவில்லை. பொதுவாக மனிதன் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள ஒரு மரத்தை வெட்டி மனித பயன்பட்டிருக்கு பயன்படுத்த வேண்டுமெனில் நமது வன சட்டத்தின் படி உரிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, வெட்டிய மரங்களுக்கு இரண்டு மடங்கு மரங்களை நட வேண்டும். ஆனால் இப்போது நடப்பதோ தலைகீழாக. இரவு நேரங்களில் மரங்கள் லாரிகளில் உயர் பொறுப்பிலிருப்பவரின் கீழ் கடத்தி கொண்டு செல்ல படுகின்றது. எனக்கு இப்போது மரத்தை வாங்குபவர்கள், கடத்துபவர்கள் மீது கோபம்வரவில்லை, இவர்களின் மேல் கோபப்பட்டும் பிரயோசனம் இல்லை. நான் கோபப்படுவது இந்த மரங்களை விற்கும் சமூக விழிப்புணர்வு இல்லாத அப்பாவி விவசாயின் மேலும் அதிகாரங்களை கொண்டுள்ள சில மனிதர்கள் மேலும் தான். ஒரு வருடத்திற்க்கு இவ்வளவு அளவு தான் மரங்களை வெட்டவேண்டும் என நிர்ணயிக்க பட்டத்தை சரியாக கடை பிடிக்கபடுவதில்லை. மரத்திலிருந்து தயாரிக்க படும் பணம் என்னும் காகிதம் கொண்டு இயற்கை என்னும் அந்த மரத்தையே அளவுக்கு அதிகமாக அளித்து கொண்டு இருக்கின்றோம். இது ஒரு புறம் இருக்க காட்டு தீ எனப்படும் சில மனிதர்களின் சுயநல தீ. அவ்வப்போது பொழியும் மழையையும் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணத்தால் மண் மழை நீரின் ஈரப்பதத்தை இழந்து வறண்டு விடுகின்றது. இருக்கின்ற மரங்களும் செடி கொடிகளும் மண்ணில் ஈரம் இல்லாததால் காய தொடங்குகின்றது.
இதன் விளைவாக இயற்கையை நம்பி வந்து வந்த வன விலங்கினங்களும் பறவைகளும் உணவுகளை தேடி மனித விவசாய பகுதிகளுக்கு வருகின்றது. இந்த உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு மனித இனமான நான் தான் காரணம் என்பதையே மறந்து அவைகளை விரட்டும் கொள்ளவும் செய்கின்றோம்.உருவத்திலும் பலத்திலும் மனிதனை விட சிறியதாக இருந்தால் தயங்காமல் கொள்கின்றோம். உருவமும் பலமும் அதிகம் எனில் மனித ஒற்றுமையுடன் போராடி அவைகளை துரத்துகின்றோம், விரட்டுகின்றோம. கொலைசெய்கின்றோம்(மின் வேலிகள் அமைத்து). மேலும் விவசாயிகளாலும், சுற்றுலா வரும் பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதிகளில் பயன்படுத்துவதால், உணவு தேடும் வன உயிரினங்களான சிட்டு குருவி, காட்டு மாடு, மான் என 45க்கும் மேற்பட்ட வகையான பல வன உயிரினங்கள் உயிர்களை இழக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மனிதனுக்கு மட்டும் இல்லாமல் இயற்கைக்கும் கேன்சரை வர வைக்கின்றது. இதனை சரியாக புரியாமல் வன விலங்குகள் விவசாயத்தை அழிகின்றன என்பது வேடிக்கையானதாக உள்ளது. உணவு என்பது அணைத்து உயிரினத்துக்கும் பொதுவானது. இதனை படித்து கொண்டு இருக்கும் நீங்கள் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றிர்களா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் கட்டாயம் உங்கள் அப்பா, அம்மா, நண்பன், உறவினர் என யாராவது விவசாயம் செய்து கொண்டு இருந்தால் அவர்களிடம் செயற்கை உரங்களினால் மண்ணின் இயற்கை அளிக்க படுவதும், மரங்களின் அழிவினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மழைநீர் மண்ணிற்கு கீழ் போகத்தையும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்க படுவதையும், முக்கியமாக வன உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் புரியும் படி எடுத்து சொல்லுங்கள், அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சரியான விழிப்புணவும் இல்லாததனால் இயற்கையை கெடுக்கும் தவறுகள் அதிகமாகின்றன. நீங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், செயற்கை உணவு பொருட்களை தவிர்க்கவும், மரங்களை வளர்க்கவும். மழை நீரை சேமித்து இயற்கையை பாதுகாக்க உறுதுணையாக இருக்கவும். இயற்கையை மீட்டு எடுப்போம்.

இந்த பதிவினை அதிகமாக பகிரவும் .
-நன்றி
சமூக அக்கறையுடன் ஆடலூர்
சமூக அக்கறையுடன் ஆடலூர்
Comments