Adalur - Schools
கல்வி வசதி
ஆடலூர் அரசு பள்ளி
ஆடலூர் அரசு பள்ளி மிக பழமையானது. இருபாலாரும் கல்வி கற்கும் பள்ளியாக தமிழ் பயிற்று மொழியாக 1928 இல் (1 முதல் 5 வகுப்பு வரை) முதல்நிலை பள்ளியாக ஆடலுர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. 2006-2011 உள்ளாட்சி தலைவராக இருந்த திருமதி தேவகிபாலகிருஷ்ணன் தானமாக அளிக்கப்பட்ட அவருக்கு சொந்தமான இடத்தில் 2010 இல் அரசு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆடலூரை சுற்றி உள்ள 5 க்கு மேற்பட்ட குக்கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி ஆடலூர் ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.
Comments